Friday, December 28, 2012

டிசம்பர் 30, 2012

திருக்குடும்பம் விழா

லூக்கா 2:41-52
   ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்கு போவார்கள்; இயேசுவுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்த பின்பு உறவினரி டையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்கு திரும்பிச் சென்றார்கள்.
   மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரி யாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
   பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவ ராய் வாழ்ந்து வந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், திருக்குடும்பத்தின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்ச் சியைக் காண்கிறோம். எருசலேம் கோவிலுக்கு சென்று திரும்பிய வேளையில் இறைமகன் இயேசுவை, மரியாவும் யோசேப்பும் இழந்து விடுகிறார்கள். இறைமகனைத் தேடி ஆண்டவ ரின் இல்லத்துக்கு மீண்டும் ஒரு பயணம் இங்கே நிகழ்கிறது. உண்மை இறைவனைப் பற்றிய உண்மைகளை அவர் தேர்ந்தெடுத்த திருச்சபைக்குள் மட்டுமே தேடிக் கண்டடைய முடியும் என்பது இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. மரியாவையும், யோசேப்பையும் போன்று கடவுளை ஆர்வமாய்த் தேடும் உணர்வைப் பெற நாம் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரை ஏக்கத் தோடு தேடும் மனநிலை நம்மில் உருவாகும் பொழுது, இறைவனின் திருக்குடும்பத்தில் முழுமையாக பங்கேற்கும் வரம் பெற்றவர்களாக நாம் வாழ முடியும்.

Monday, December 24, 2012

டிசம்பர் 25, 2012

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

மத்தேயு 1:18-25
   இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப் பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற் றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண் டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்கு கனவில் தோன்றி. "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற் றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் மரியா கருவுற்றிருப் பது தூய ஆவி யால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.
   'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம் மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

Friday, December 21, 2012

டிசம்பர் 23, 2012

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு
லூக்கா 1:39-45
   அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றி லிருந்த குழந்தை மகிழ்ச்சி யால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப் போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்ற வர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த் துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், நம்பிக்கையால் இறைமகனைக் கருத்தாங்கிய மரியா எலிச பெத்தை சந்தித்து வாழ்த்திய நிகழ்வைக் காண்கிறோம். இறைவனின் தாயாகும் பேறுபெற்ற நிலையிலும், மரியா எலிசபெத்துக்கு உதவி செய்ய விரைந்து செல்கிறார். இங்கு மரியா வின் தாழ்ச்சியுள்ள குழந்தை உள்ளத்தை நம்மால் காண முடிகிறது. எங்கு குழந்தை உள்ளம் இருக்கிறதோ அங்கே இறைவன் கருவாக உருவெடுப்பார். இறையன்னை மரியாவின் வாழ்த்து, எலிசபெத்தின் வயிற்றில் இருக்கும் யோவானை மகிழ்ச்சியால் துள்ளச் செய்கிறது. இறைமகனின் வருகையை முன்னறிவிக்க வந்தவர், தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவரை அடையாளம் கண்டு கொள்கிறார். நாமும் அன்னை மரியாவைப் போன்று நம்பிக்கை உள்ளவர்களாக இறைமகனை கருத்தாங்கி, யோவானைப் போன்று அவரில் மகிழ்ந்திருந் தால் ஆண்டவரை வரவேற்கும் பேறுபெற்றவர்களாக மாற முடியும்.

Friday, December 14, 2012

டிசம்பர் 16, 2012

திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு
லூக்கா 3:10-18
   அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் போதித்துக் கொண்டிருந்தபோது, "நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லா தவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்றார். வரிதண்டுவோரும் திரு முழுக்குப் பெற வந்து, "போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவரிடம் கேட்டனர். அவர், "உங்களுக் குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண் டாதீர்கள்'' என்றார். படைவீரரும் அவரை நோக்கி, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். அவர், "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என் றிருங்கள்'' என்றார்.
   அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதி யடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோது மையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், இயேசுவின் வருகையை முன்னறிவிப் பதைக் காண்கிறோம். மனிதராக பிறந்தவர்கள் அனைவரிலும் பெரியவர் என்று நற்செய்தி போற்றும் திருமுழுக்கு யோவான், தன்னைவிட பெரியவரான இயேசுவைப் பற்றி மக்களுக்கு போதிக்கிறார். நல்லோரையும் தீயோரையும் பிரித்து தீர்ப்பிட வல்லவரான ஆண்டவரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்கிறார். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாத வரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்று கூறி, பகிர்தலின் மகிழ்ச்சியை அனுபவிக்க அனைவருக்கும் கற்றுத் தருகிறார். அநீதியான செயல் களைப் புறக்கணித்து, அன்பு மற்றும் நீதியின் அடிப்படையிலான நற்செயல்களை செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். மீட்பராம் கிறிஸ்துவின் வருகைக்கு மனதார நம்மை தயாரிக் கும் பொழுது, மகிழ்ச்சி அளிக்கும் அவரது வருகையை நாம் விரைவாக்க முடியும்.

Friday, December 7, 2012

டிசம்பர் 9, 2012

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு
லூக்கா 3:1-6
   திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேய பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு இத்துரேயா, திரக்கோனித்து பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந் தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக் கைப் பெற்றார். "பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திரு முழுக்குப் பெறுங்கள்'' என்று யோர்தான் ஆற்றை அடுத் துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றி வந்தார்.
    இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்கு கிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மை யாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல் லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவ ரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வருகைக்காக திருமுழுக்கு யோவான் மக்களைத் தயார் செய்வதைக் காண்கிறோம். ஆண்டவரின் முன்னோடியாக வந்த யோவான், தனது இறைவாக்கினருக்குரிய பணியை சிறப்பாக செய்கிறார். கடவுளின் பாதையைச் செம்மை யாக்குமாறு வந்த அவர், மக்கள் அனைவரும் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துமாறு அழைப்பு விடுக்கிறார். ஆண்டவரை வரவேற்க மக்களின் உள்ளத் தூய்மை மிகவும் தேவை என்பதை யோவான் வலியுறுத்துகிறார். ஆண்டவரின் வருகைக்காக பள்ளத்தாக்குகள் நிரப்பப்படவும், மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படவும் வேண்டும். இவ்வாறு கோண லானவற்றை நேராக்கவும், கரடுமுரடானவற்றை சமமாக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்கு தடையாக இருக்கும் பாவங்களை விட்டு நாம் மனம்மாறும் பொழுது, ஆண்டவரின் மீட்பை விரைவில் காண முடியும்.

Saturday, December 1, 2012

டிசம்பர் 2, 2012

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
லூக்கா 21:25-28,34-36
   அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுல கில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தி னால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான் வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமை யோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வரு வதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும் போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களி யாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்ச ரிக்கையாய் இருங்கள். மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னி லையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தனது இரண்டாம் வருகையின்போது நிகழ இருப்பவை பற்றி எடுத்துரைக்கிறார். அப்போது "மண்ணுலகில் மக்களினங்கள் என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தி னால் மயக்கமுறுவர்" என்று இயேசு எச்சரிக்கை தருகிறார். குடிவெறி, களியாட்டம் போன்ற கேளிக்கைகளில் நம் மனதை செலுத்தாமல், ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து எப் பொழுதும் தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். வானதூதர்கள் புடைசூழ இயேசுவின் வருகை நிகழப்போவது உண்மை. அப்போது நமது செயல்களுக்காக, ஆண்டவர் முன்னிலை யில் நாம் பதிலளிக்க வேண்டும். குழப்பங்களும், கவலைகளும் சூழ்ந்துள்ள இந்த உலகில், விழிப்பாயிருந்து மன்றாடும்போது ஆண்டவரின் மீட்பை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

Friday, November 23, 2012

நவம்பர் 25, 2012

கிறிஸ்து அரசர் பெருவிழா
யோவான் 18:33-37
   அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், "நீ யூதரின் அரசனா?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?'' என்று கேட் டார். அதற்குப் பிலாத்து, "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்ற தாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக்கொடுக் கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' என்றார். பிலாத்து அவரிடம், "அப்படியானால் நீ அரசன்தானோ?'' என்று கேட்டான். அதற்கு இயேசு, "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற் காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, பிலாத்துவின் முன்னிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளா னவராய் நிற்கிறார். அனைத்துலகின் அரசரான அவர் ஒரு சாதாரண ஆளுநர் முன்பு கைகள் கட்டுண்டவராய், மரண தண்டனைக்குரிய கைதியாய் நிறுத்தப்பட்டிருக்கிறார். இயேசுவிடம் குற்றம் எதையும் காண முடியாத பிலாத்து, அவரைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறான். "நீ யூதரின் அரசனா?'' என்பது அவனது கேள்வி. "உண்மையை எடுத்துரைப் பதே என் பணி" என்பது இயேசுவின் பதில். கடவுளைப் பற்றிய உண்மையைத் தன்னில் வெளிப்படுத்துபவராக இயேசு வந்தார். நம் அரசர் இயேசுவின் குரலுக்கு செவிசாய்ப்பவர் களாய் திகழும்போது, உண்மையைச் சார்ந்தவர்களாக நாம் வாழ முடியும்.

Friday, November 16, 2012

நவம்பர் 18, 2012

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு
மாற்கு 13:24-32
   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "அந் நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலி ருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோ டும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார் கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண் ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடி வரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்ட வர்களைக் கூட்டிச் சேர்ப்பார். அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும் வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, உலகின் இறுதி நாள்களைப் பற்றிப் பேசுகிறார். "அந் நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்" என்று, தமது இரண்டாம் வருகைக்கு முன் நிகழப்போகிறவற்றைப் பற்றி இயேசு எடுத்து ரைப்பதைக் காண்கிறோம். ஆண்டவரின் நாளை எதிர்பார்த்து விழிப்பாய் இருப்பதற்காகவே இந்த எச்சரிக்கை நமக்கு தரப்படுகிறது. ஆண்டவர் முன் தூயவர்களாய் நிற்கும் வகையில், நமது வாழ்வை அமைத்துக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரை எதிர்நோக்கிய தாய் நமது வாழ்வை அமைத்துக்கொள்ளும்போது, நாமும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற முடியும்.

Friday, October 26, 2012

அக்டோபர் 28, 2012

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு

மாற்கு 10:46-52
   இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகி றார் என்று அவர் கேள்விப்பட்டு, 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், 'தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, 'அவரைக் கூப்பிடுங்கள்' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப் பிட்டு, 'துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், 'ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்' என்றார். இயேசு அவரிடம், 'நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கண் தெரியாத பிச்சைக்காரருக்கு பார்வை அளிப்பதைக் காண்கிறோம். அவர் இயேசுவின் வல்ல செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால், அவர் தனக்கு பார்வை அளிக்க முடியும் என்று பர்த்திமேயு நம்பினார். இயேசு யாருக்கு அற்புதம் செய்தார் என்பதை அறியவில்லை என்றாலும், அவர் தனக்கும் பார்வையளிப்பார் என்று பர்த்திமேயு முழுமையாக நம்பினார். அவரது நம்பிக்கை மனதளவில் மட்டும் நின்று விடவில்லை. எனவே தான் அமர்ந்திருந்த வழியில் இயேசு செல்கிறார் என்பதை அறிந் ததும், 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று அபயக் குரல் எழுப்புகிறார். இயேசுவும் பர்த்திமேயுவின் நம்பிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அவரை அருகில் அழைத்து அவருக்கு பார்வை அளிக்கிறார். நாமும் நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு, ஆண்டவரின் உதவியை நாடுகின்றபோது அவரது இரக்கத்தையும் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியும். 

Friday, October 19, 2012

அக்டோபர் 21, 2012

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு
மாற்கு 10:35-45
   அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்பு கிறோம்'' என்றார்கள். அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, "நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்'' என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கி றீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "இயலும்'' என்று சொல்ல, இயேசு அவர் களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திரு முழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும் படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்'' என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
   இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தலைமைப் பண்பைப் பற்றி எடுத்துரைப்பதைக் காண் கிறோம். திருத்தூதர்கள் எப்பொழுதும் இயேசுவின் அரசாட்சியைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தார்கள். அவர் உரோமையரை விரட்டிவிட்டு இஸ்ரயேலின் ஆட்சியைக் கைப் பற்றப் போகிறார் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அதே மனநிலையில்தான் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகுகிறார்கள். அவரது அரசில் தங்களுக்கு முக்கிய பதவி வேண்டுமென்று கேட்கிறார்கள். இதனால், இந்த இருவர் மீதும் மற்ற சீடர்கள் கோபம் கொண்டார்கள் என்று வாசிக்கிறோம். இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்தவராய், பதவியைப் பற்றிய தெளிவை திருத்தூதர்களுக்கு வழங்குகிறார். பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராகவும், முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் பணியாள ராகவும் இருக்க வேண்டுமென அவர் கற்பிக்கிறார். இயேசுவைப் பின்பற்றி, தொண்டு ஆற்று வதற்கும் பலருடைய மீட்புக்காக நமது வாழ்வை அர்ப்பணம் செய்வதற்கும் நாம் தயாராகும் போது, இயேசுவின் ஆட்சியை இந்த உலகில் நிறுவ முடியும். 

Friday, October 12, 2012

அக்டோபர் 14, 2012

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு
மாற்கு 10:17-30
  அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த போது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள் படியிட்டு, "நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக் கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவ ரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல் லவா? 'கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக் காதே; உன் தாய் தந்தையை மதித்து நட'' என்றார். அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
   இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்'' என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படு வது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார். அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார். அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடு களையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளை களையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுக ளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்வதைப் பற்றி கேள்வி எழுப்புவதைக் காண்கிறோம். பிற ருக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்கும்படி அறிவுறுத்தும் கட்டளைகளை கடைபிடிக்கு மாறு அவரிடம் இயேசு கூறுகிறார். தான் அனைத்து கட்டளைகளையும் கடைபிடித்து வருவ தாக இளைஞர் கூறியதும், அதற்கும் மேலான ஒன்றை செய்யுமாறு இயேசு கூறுகிறார்; அவரிடம் உள்ளவற்றை விற்று ஏழைகளுக்கு கொடுக்குமாறு பணிக்கிறார். ஒருவரிடம் இருக் கின்ற செல்வத்தின் அளவு அதிகரிக்கும்போது, பிறருக்கு உதவ வேண்டிய பொறுப்பும் அதி கரிக்கிறது என்பதை இயேசு இங்கு சுட்டிக் காட்டுகிறார். கடவுளுக்காக நாம் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டுமென இயேசு அழைப்பு விடுக்கிறார். உலக இன்பங்களை புறக்கணித்து, ஆண்டவருக்காக சில இன்னல்களை ஏற்றுக்கொள்ளும்போது நாம் நிலைவாழ் வினை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.  

Friday, October 5, 2012

அக்டோபர் 7, 2012

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு
மாற்கு 10:2-16
   அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?'' என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொ ழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' என்று கேட்டார். அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றி தழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித் துள்ளார்'' என்று கூறினார்கள். அதற்கு இயேசு அவர்களி டம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக் கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத் திலேயே கடவுள், 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட் டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவ ரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார். பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்'' என்றார்.
   சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளா தோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கணவன் மனைவியிடம் இருக்க வேண்டிய ஒன்றிப்பைப் பற்றி பேசுகிறார். கணவனும் மனைவியும் அன்புடன் ஒன்றித்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்துகொண்டு வாழும்போது திருமண உறவில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மனைவியை விலக்கிவிட்டு வேறு மணம் புரியும் கணவனும், கணவனை விலக்கிவிட்டு வேறு மணம் புரியும் மனைவி யும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று இயேசு கடுமையாகச் சாடுகிறார். பிரிவை அல்ல, ஒன்றிப்பையே கடவுள் விரும்புகிறார். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக் கட்டும். சிறு பிள்ளைகளைப் போன்று மன்னித்து மறக்கும் உள்ளத்துடன் வாழும்போது, இல்லறத்தை மட்டுமல்ல, இறையாட்சியையும் நம்மால் கட்டியெழுப்ப முடியும்.

Friday, September 28, 2012

செப்டம்பர் 30, 2012

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு
மாற்கு 9:38-48
   அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒரு வர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார். அதற்கு இயேசு கூறியது: "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிப வர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்ப தால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்க ளுக்குச் சொல்கிறேன். என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோ ருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நர கத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறை யாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, ஆண்டவரின் பெயரால் செயல்படுபவர்களைப் பற்றி பேசுகிறார். கிறிஸ்துவுக்காக பணி செய்பவர்கள் தூய உள்ளம் கொண்டவர்களாய், குழந்தை களைப் போன்று இருக்க அழைக்கப்படுவதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் சீடர்கள் என்ப தற்காக, அவர்களுக்கு உதவி செய்பவர்கள் கைம்மாறு பெறாமல் போகார் என்று இயேசு கூறுகிறார். அதே வேளையில், கிறிஸ்துவின் சீடர்களை பாவம் செய்யத் தூண்டுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். மேலும் தனது சீடர்கள் அனைவரும் தூய வாழ்வு வாழ வேண்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். பாவம் செய்யும் உடல் உறுப்புகளோடு நரகத்துக்கு செல்வதைவிட, உடல் ஊனமுற்றவராய் இறையாட்சி யில் நுழைய அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் அழைப்புக்கு உகந்த வகையில் குழந்தை களைப் போன்று மாறும்போது, நாம் இறைத்தந்தைக்கு ஏற்ற  தூய வாழ்வு வாழ முடியும்.

Friday, September 21, 2012

செப்டம்பர் 23, 2012

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு
மாற்கு 9:30-37
   அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப் பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், "மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கி றார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப் பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.
   அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று அவர்களிடம் கேட் டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட் டும்'' என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது எப்படி என்பதைப் பற்றி சீடர்களுக்கு கற்பிக்கிறதைக் காண்கிறோம். இயேசு தனது பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றைப் பற்றி சீடர்களுக்கு முன்னறிவிக்கிறார். ஆனால் அவரது வார்த் தைகளைப் புரிந்துகொள்ள சீடர்கள் தயாராக இல்லை. ஏனெனில், இயேசு அரசரானால் யார் என்ன பதவிக்கு வர முடியும் என்பதைப் பற்றிய சிந்தனையில் அவர்கள் இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கப்பர்நாகுமுக்கு செல்லும் வழியில் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் நடக்கிறது. இதனை அறிந்த இயேசு, பெரியவராக அதிகாரத்தில் இருக்க விரும்பு கிறவர் முதலில் பணிவிடை செய்ய தயாராக இருக்க வீண்டும் என்று அறிவுறுத்துகிறார். கிறிஸ்துவின் பெயரால் நாம் பிறரை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் விண்ணக தந்தைக்கு உகந்தவர்களாக மாற முடியும்.

Friday, September 14, 2012

செப்டம்பர் 16, 2012

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு
மாற்கு 8:27-35
   அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியா வைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல் கிறார்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். 'மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர் கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டு கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்' என்று இயேசு அவர்க ளுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவு ளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.
   பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின் பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடு வார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னைப் பற்றி பிறர் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை சீடர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதைக் காண்கிறோம். மக்களின் உள்ளத்தையும், எண்ணங்களையும் அறிந்திருந்த இயேசு அவற்றை சீடர்களின் வாய்மொழி யாக கேட்டறிந்ததில் ஒரு நோக்கம் இருக்கிறது. தான் உலகிற்கு வந்ததன் நோக்கத்தை சீடர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றே இயேசு சீடர்களிடம் கேள்வி எழுப்புகிறார். பேதுரு இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்டாலும், அவரை இவ்வுலக அரசுக்குரியவ ராகவே பார்க்கிறார். ஆனால் இறையாட்சியை உலகில் நிறுவ வந்த இயேசு துன்பங்களை ஏற்பதன் அவசியத்தை சீடர்களுக்கு உணர்த்துகிறார். நம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடரும்போது, நாம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

Friday, September 7, 2012

செப்டம்பர் 9, 2012

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு
மாற்கு 7:31-37
   அக்காலத்தில் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழி யாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலே யக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுப வருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்து குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்து சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி 'எப்பத்தா' அதாவது 'திறக்கப்படு' என்றார். உடனே அவரு டைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
   இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவ ரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "இவர் எத்துணை நன்றாக யாவற் றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!'' என்று பேசிக்கொண்டார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒரு வரை குணப்படுத்துகிறார். இயேசுவின் சொல்லிலும் செயலிலும் வல்லமை வெளிப்பட்டு ஓர் அற்புதம் நிகழ்வதைக் காண்கிறோம். அந்த காத்து கேளாதவரைக் கூட்டிச் சென்றவர்கள், மற்றவர்களின் பேச்சைக் கேட்டு இயேசுவிடம் சென்றிருக்க வேண்டும். எனவேதான், இயேசு வின் புதுமையைக் கண்டு வியப்படைகிறார்கள். அதன் தாக்கம் அவர்களது செயலில் வெளிப்படுகிறது. இயேசுவின் கட்டளையையும் மீறி அவர்கள் ஊரெங்கும் சென்று பரவும் வகையில் அதை அறிவித்தார்கள் என்று காண்கிறோம். நாமும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கும்போது, அவரது மாட்சியை இந்த உலகம் உணரச் செய்ய முடியும்.

Saturday, September 1, 2012

செப்டம்பர் 2, 2012

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு
மாற்கு 7:1-8,14-15,21-23
   ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற் றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத் திருக்கிறார். "இம்மக்கள் உதட்டினால் என் னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக் கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
   இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக் குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயி ருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத் திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காம வெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் கட்டளைகளை எந்த விதத்தில் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்குகிறார். மனிதரின் தேவைக்கு ஏற்ப அவற்றைத் திரித்துக் கூறுவது தவறு என்று அவர் எடுத்துரைக்கிறார். கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ் வதை விட உலகம் சார்ந்த மரபுகளைப் பின்பற்றுவது முக்கியமானது அல்ல என்று கூறும் இயேசு, மரபுகளை உயர்த்திப் பிடிப்போரைக் கடுமையாக சாடுகிறார். நமது உணவுகள் அல்ல, நமது சிந்தனைகளே நாம் பாவம் செய்ய காரணமாக அமைகின்றன என்பதை நம் ஆண்டவர் இங்கு தெளிவுபடுத்துவதைக் காண்கிறோம். தீமைகளை விலக்கி, நல்ல உள்ளம் கொண்ட வர்களாய் வாழும்போது நம்மால் கடவுளுக்கு உகந்தவர்களாய் மாற முடியும்.

Friday, August 24, 2012

ஆகஸ்ட் 26, 2012

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு
யோவான் 6:60-69
   அக்காலத்தில் இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், "இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப் பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'' என்று பேசிக் கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப் பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவி யைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை'' என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், "இதன் காரணமாகத் தான் 'என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக் குக் கூறினேன்'' என்றார்.
   அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவ ரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய்விட நினைக்கி றீர்களா?'' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவு ளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள், அதில் உள்ள உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியாததால் அவரிடம் இருந்து விலகிச் சென்றதை காண் கிறோம். வார்த்தையான இறைவனின் வார்த்தைகள் யூத மக்களுக்கு கசப்பாக தெரிகின்றன. இயேசுவின் வார்த்தைகளில் இருந்த ஆன்மீக ஆழத்தைக் காணும் மனநிலை அவர்களிடம் இல்லை. கடவுளின் மறைபொருள் நமக்கு புரியாததாக இருந்தாலும், அதன் உண்மை கசப் பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். ஏனெனில் ஆண்டவ ரின் வார்த்தைகள் வாழ்வு தருபவையாக உள்ளன. பேதுருவைப் போல ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும் மனநிலையைப் பெற்றுக்கொள்ளும்போது நாம் உண்மை வாழ்வைக் கண் டடைய முடியும்.

Friday, August 17, 2012

ஆகஸ்ட் 19, 2012

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு
யோவான் 6:51-58
   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என் றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கி றேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்றார். "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
   இயேசு அவர்களிடம் கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத் திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் உலகு வாழ்வதற்காக இயேசு தனது சதையை உணவாகக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதை புரிந்துகொள்ள முடியாத மக்கள் தங்களிடையே வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார்கள். நற்கருணையில் இயேசு முழுமையாக பிரசன்னமாகியிருப் பதை உணராத மக்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இயேசு வின் வாக்குறுதிகள் உண்மையானவை. அவர் கோதுமை அப்பம் மற்றும் திராட்சை இரசத் தின் வடிவில் தனது சதையையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகவும் பானமாகவும் தந்தி ருக்கிறார். இயேசுவின் சதையை உண்டு, இரத்தத்தைக் குடிப்பவரே அவரோடு இணைந்திருப் பர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய இயேசுவில் முழுமை யாக நம்பிக்கை கொண்டு வாழும் போது, அவர் வழியாக நாம் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Friday, August 10, 2012

ஆகஸ்ட் 12, 2012

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு
யோவான் 6:41-51
   அக்காலத்தில் "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவ ருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். "இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தை யும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படிச் சொல்லலாம்?" என்று பேசிக் கொண்டார்கள்.
   இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னி டம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய் யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற் காகவே கொடுக்கிறேன்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னை விண்ணகத்தில் இருந்து வந்தவர் என்று கூறியதால், யூதர்கள் முணுமுணுப்பதைக் காண்கிறோம். இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் கள் தயங்குகிறார்கள். இயேசுவை ஒரு சாதாரண மனிதரராகவே பார்த்து பழகியவர்களுக்கு, அவரை விண்ணில் இருந்து வந்தவராக, அதாவது இறைமகனாக ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. நம்மோடு இருக்கிற இவர் நம்மைவிட உயர்ந்தவராக இருக்க முடியாது என்று அவர்கள் நினைக்கின்றனர். இயேசுவோ தன்னில் நம்பிக்கை கொள்வோருக்கு நிலை வாழ்வை வாக்களிக்கிறார். விண்ணகத்தில் இருந்து வந்த இயேசுவே நிலைவாழ்வு தரும் உணவு என்பதை முழுமையாக நம்ப நாம் அழைக்கப்படுகிறோம். நற்கருணையில் இயேசு வின் சதையை உண்ணும் பேறுபெற்ற நாம், அவரில் நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் போது நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Friday, August 3, 2012

ஆகஸ்ட் 5, 2012

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு
யோவான் 6:24-35
   அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியா வில் இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் படகு களில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்ற னர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்ட தால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தை யாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்'' என்றார். அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்'' என்றார்.
   அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! 'அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!'' என்றனர். இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது'' என்றார். அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்'' என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என் னிடம் நம்பிக்கை கொண்டிருப்ப வருக்கு என்றுமே தாகம் இராது'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தானே வாழ்வு தரும் உணவு என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். அப்பங்களை வயிறார அவர்கள், "மோசே வானிலிருந்து மன்னாவைப் பொழியச் செய்து அற்புதம் செய்தாரே, நீர் என்ன அரும் செயல் செய்யப்போகிறீர்?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். உணவுக்காக ஏங்கிய அவர்களுக்கு இயேசு தானே வானிலிருந்து இரங்கி வந்த உயிருள்ள உணவு என்று தெளிவுபடுத்துகிறார். நற்கருணை வழியாக தன் னையே உணவாக அளிக்கும் இயேசுவில் நம்பிக்கை வைக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் நன்மைத்தனத்தில் முழுமையாக நம்பிக்கை கொள்ளும்போது, நாம் நிலை வாழ்வுக்கு உரியவர்களாக மாற்றம் பெற முடியும்.

Friday, July 27, 2012

ஜூலை 29, 2012

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு
யோவான் 6:1-15

   அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்து வந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திர ளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர் கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந் திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார்.
   அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார். இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந் திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்க போகிறார் கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்து ஐந்தா யிரம் பேருக்கு உணவளிக்கிறார். இங்கு இயேசுவின் சீடர்களில் நிலவும் இரண்டு விதமான மனநிலைகளைப் பார்க்கிறோம். இருநூறு தெனாரியத்துக்கு அப்பம் வாங்கினாலும் யாருக் கும் பசியாற்ற முடியாது என்று பிலிப்பு நினைக்கிறார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு இயேசுவால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று அந்திரேயா நம்பு கிறார். பிலிப்பின் மனித சிந்தனை அல்ல, அந்திரேயாவின் இறை நம்பிக்கையே வெற்றி பெற்றது. நாமும் மனித சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு முழு மனதோடு ஆண்டவரை நம்பும் பொழுது, நமது வாழ்வில் அற்புதங்களைக் காண முடியும்.

Friday, July 20, 2012

ஜூலை 22, 2012

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
மாற்கு 6:30-34

   அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலை நிலத் திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவ துமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
   அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர் களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களி லிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தனது சீடர்களை ஓய்வெடுக்க சொல்கிறார். உழைப்ப வர்கள் அனைவருக்கும் ஒய்வு தேவை. கிறிஸ்து அனுப்பிய பணியாளர்கள், தங்கள் பணிக்கு பின் ஒய்வெடுக்கின்றனர். பணியாளர்கள் ஓய்வில் இருந்தாலும், ஆண்டவர் இயேசு ஓய் வெடுக்கவில்லை. அவர் மக்கள் ஆயரில்லா ஆடுகளைப் போன்று இருப்பதைக் கண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். மக்களை நல்வழிப்படுத்த ஆண்டவர் எப்பொழுதும் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார். ஆயர்கள் மந்தையை சிதறடிக்கும்போது, அவர் புதிய ஆயர்களை அனுப்புவதுடன் தாமும் இரக்கமுள்ள ஆயராக செயல்படுகிறார். இறைவன் நமக்கு தந்துள்ள ஆயர்கள் (திருப்பணியாளர்கள்) வழியாக, அவர் நம்மை வழிநடத்துவார். அவர்களை ஏற்று ஆண்டவரின் அரவணைப்பில் வாழும்போது, நாம் அவருக்கு உண்மை யான சாட்சிகளாக திகழ முடியும்.

Friday, July 13, 2012

ஜூலை 15, 2012

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு
மாற்கு 6:7-13

   அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவ ழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங் கினார். அவர்களுக்கு தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித் தார். மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளா மலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கி ருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்று அவர்களுக்குக் கூறினார். அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையரசைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க தனது சீடர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். அவர்களுக்கு நோய்களை குணமாக்கவும், பேய்களை ஓட்டவும் அதிகாரம் அளித்து, ஒருவருக்கு துணையாக மற்றொருவரை அனுப்பு கிறார். சீடர்கள் இயேசுவில் நம்பிக்கை கொண்டவர்களாக பல வல்ல செயல்களை செய் கிறார்கள். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது பணியை செய்ய அழைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும் இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழும்போது நாமும் இயேசுவுக்கு சான்று பகர்பவர்களாக வாழ்வோம். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உறு துணையாக செயல்படும்போது, மற்றவர்கள் நடுவில் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும்.

Friday, July 6, 2012

ஜூலை 8, 2012

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
மாற்கு 6:1-6

   அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வு நாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், "இவருக்கு இவை யெல்லாம் எங்கிருந்து வந் தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கி றார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக் கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயங்குவதைக் காண்கிறோம். அவர்களது நம்பிக்கையின்மை இயேசுவை புதுமைகள் செய்ய விடாமல் தடுக்கிறது. நாம் பிறர் இருக்கும் நிலையிலேயே அவர்களை ஏற்றுக்கொள்ளவும், நம்பிக்கையால் புதுமைகளைக் காணவும் அழைக்கப்படுகிறோம். ஏற்றுக்கொள்ளுதல், நம் பிக்கை ஆகிய இரு மதிப்பீடுகளை இன்றைய நற்செய்தி நமக்கு போதிக்கிறது. நம்பிக்கை யோடு நாம் கடவுளையும் பிறரையும் ஏற்றுக்கொள்ளும்போது, நமது வாழ்வில் புதுமை களைக் காண முடியும்.

Sunday, July 1, 2012

ஜூலை 1, 2012

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு
மாற்கு 5:21-43

   அக்காலத்தில் இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரி டம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழு கைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டி னார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.
   அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத் தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்'' என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவ ரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், 'என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!'' என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், "மகளே, உனது நம் பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார்.
   அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலி ருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'' என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓல மிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தை யையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்'' என்றார். அதற்கு, 'சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது'' என்று அவர் அவர்க ளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இரத்தபோக்குடைய ஒரு பெண் தனது நம்பிக்கையால் குணம் பெறுவதையும், இறந்துப்போன ஒரு சிறுமி அவளது தந்தையின் நம்பிக்கையால் உயிர்த் தெழுந்ததையும் காண்கிறோம். இங்கே நலமளிக்கும் பணியை செய்பவர் இறைமகன் இயேசுவே என்றாலும், அதற்கு காரணம் தொடர்புடையவர்களின் நம்பிக்கையே என்பது தெளிவு. நாமும் முழு நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்லும்போது, நமது நம்பிக்கை நம்மை நலமாக்கும். நமது நம்பிக்கை பிறரையும் நலமாக்கும் போது, நாம் இயேசுவின் சிறந்த சாட்சிகளாக வாழ முடியும்.   

Friday, June 22, 2012

ஜூன் 24, 2012

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழா
லூக்கா 1:57-66,80

   எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டு சுற்றி வாழ்ந் தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
   எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல் லையே'' என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிட லாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந் தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
   குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்க ளுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. இறைமகன் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு முன்னோடியாகவும், கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுபவராகவும் யோவான் பிறந்தார். ஆண்டவரின் வழியை செம் மைப்படுத்தும் சிறந்த இறைவாக்கினராக செயல்பட, தாயின் கருவில் இருக்கும்போதே அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். யோவானின் சொல்லும், செயலும் மக்களை கடவுளை நோக்கி வழிநடத்தின. கடவுளின் பணிக்காக அழைக்கப்பட்டுள்ள நாமும், யோவானைப் பின் பற்றி மனத்தூய்மையுடன் வாழும்போது மற்றவர்களுக்கு உண்மை கடவுளை சுட்டிக்காட்டு பவர்களாக செயலாற்ற முடியும்.

Friday, June 15, 2012

ஜூன் 17, 2012

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு
மாற்கு 4:26-34

   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறி யது: "இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிட லாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர் கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது'' என்று கூறினார்.
   மேலும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும் பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்ட பின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்'' என்று கூறினார். அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர் களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையாட்சியின் தன்மையை உணர்த்தும் இரண்டு உவமைகளைத் தருகிறார். தானாகவே முளைத்து வளரும் சில பயிர்களைப் போன்று தாமாகவே கடவுளைத் தேடிவரும் மனிதர்களாலும், கடுகு விதையைப் போன்று இறைவனே நட்டு வளர்க்கும் திருச்சபையாலும் இறையாட்சி வளர்ச்சி அடைகிறது என்பதை இந்த உவமைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருச்சபையின் மக்களாக இருக்கும் நாம், கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நன்மைகள் செய்து வாழும்போது இறையாட்சியின் தூதுவர்களாக விளங்க முடியும்.

Friday, June 8, 2012

ஜூன் 10, 2012

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா
மாற்கு 14:12-16,22-26

   புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இரு வரை அனுப்பினார்: "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல் லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்கு செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமை யாளரிடம், "'நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய் யுங்கள்.'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத் தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
   அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறை யாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒரு போதும் குடிக்கமாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

சிந்தனை:
   கோதுமை அப்பத்திலும், திராட்சைப்பழ இரசத்திலும் நம் ஆண்டவரின் திருஉடலும், திரு இரத்தமும் அவரது இறைப்பிரசன்னமும் அடங்கியுள்ள ஒப்பற்ற மறையுண்மையை இன்று நாம் கொண்டாடுகிறோம். உலகமே கொள்ள முடியாத இறைவன், தன்னை உணவின் வடி விலே தந்திருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். நம் கண்ணுக்கு புலப்படாததாக இந்த நற் கருணை மறைபொருள் இருந்தாலும், இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் வகை யில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உண்மை. நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழும்போது, நற்கருணை நாதருக்கு நாம் உண்மையாக சான்றுபகர முடியும்.

Friday, June 1, 2012

ஜூன் 3, 2012

மூவொரு இறைவன் பெருவிழா
மத்தேயு 28:16-20

   அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென் றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகி லும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்க ளினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவி யார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

சிந்தனை:
  ஒரே கடவுள், மூன்று இறையாட்களாக செயல்படுகிறார் என்ற மாபெரும் மறைபொருளை இன்று நாம் கொண்டாடுகிறோம். மனித உடலெடுத்து நம்மோடு வாழ்ந்த இறைமகன் இயேசுவே இந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். மனிதரின் சாதாரண அறிவுக்கு புரியவில்லை என்பதால், நாம் இதை மறுக்க முடியாது. கடவுள் நமது அறிவுக்கு அப்பாற்பட்டவர். தந்தை, மகன், தூய ஆவியார் என்று செயலாற்றும் மூவொரு இறைவ னுக்கு உண்மையுள்ளவர்களாக வாழும்போது, நாம் அவரது பிள்ளைகளாக மாற முடியும்.