Saturday, September 1, 2012

செப்டம்பர் 2, 2012

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு
மாற்கு 7:1-8,14-15,21-23
   ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற் றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத் திருக்கிறார். "இம்மக்கள் உதட்டினால் என் னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக் கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
   இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக் குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயி ருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத் திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காம வெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் கட்டளைகளை எந்த விதத்தில் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்குகிறார். மனிதரின் தேவைக்கு ஏற்ப அவற்றைத் திரித்துக் கூறுவது தவறு என்று அவர் எடுத்துரைக்கிறார். கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ் வதை விட உலகம் சார்ந்த மரபுகளைப் பின்பற்றுவது முக்கியமானது அல்ல என்று கூறும் இயேசு, மரபுகளை உயர்த்திப் பிடிப்போரைக் கடுமையாக சாடுகிறார். நமது உணவுகள் அல்ல, நமது சிந்தனைகளே நாம் பாவம் செய்ய காரணமாக அமைகின்றன என்பதை நம் ஆண்டவர் இங்கு தெளிவுபடுத்துவதைக் காண்கிறோம். தீமைகளை விலக்கி, நல்ல உள்ளம் கொண்ட வர்களாய் வாழும்போது நம்மால் கடவுளுக்கு உகந்தவர்களாய் மாற முடியும்.