Friday, October 5, 2012

அக்டோபர் 7, 2012

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு
மாற்கு 10:2-16
   அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?'' என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொ ழியாக, "மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' என்று கேட்டார். அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றி தழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித் துள்ளார்'' என்று கூறினார்கள். அதற்கு இயேசு அவர்களி டம், "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக் கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத் திலேயே கடவுள், 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட் டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவ ரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார். பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்'' என்றார்.
   சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளா தோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கணவன் மனைவியிடம் இருக்க வேண்டிய ஒன்றிப்பைப் பற்றி பேசுகிறார். கணவனும் மனைவியும் அன்புடன் ஒன்றித்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்துகொண்டு வாழும்போது திருமண உறவில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மனைவியை விலக்கிவிட்டு வேறு மணம் புரியும் கணவனும், கணவனை விலக்கிவிட்டு வேறு மணம் புரியும் மனைவி யும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று இயேசு கடுமையாகச் சாடுகிறார். பிரிவை அல்ல, ஒன்றிப்பையே கடவுள் விரும்புகிறார். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக் கட்டும். சிறு பிள்ளைகளைப் போன்று மன்னித்து மறக்கும் உள்ளத்துடன் வாழும்போது, இல்லறத்தை மட்டுமல்ல, இறையாட்சியையும் நம்மால் கட்டியெழுப்ப முடியும்.