லூக்கா 1:57-66,80
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டு
சுற்றி வாழ்ந் தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.
எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்'' என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல் லையே'' என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிட லாம்? உம் விருப்பம் என்ன?'' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந் தையின் பெயர் யோவான்'' என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?'' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்க ளுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

சிந்தனை:
இன்றைய நற்செய்தி புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. இறைமகன் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு முன்னோடியாகவும், கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுபவராகவும் யோவான் பிறந்தார். ஆண்டவரின் வழியை செம் மைப்படுத்தும் சிறந்த இறைவாக்கினராக செயல்பட, தாயின் கருவில் இருக்கும்போதே அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். யோவானின் சொல்லும், செயலும் மக்களை கடவுளை நோக்கி வழிநடத்தின. கடவுளின் பணிக்காக அழைக்கப்பட்டுள்ள நாமும், யோவானைப் பின் பற்றி மனத்தூய்மையுடன் வாழும்போது மற்றவர்களுக்கு உண்மை கடவுளை சுட்டிக்காட்டு பவர்களாக செயலாற்ற முடியும்.