Friday, December 7, 2012

டிசம்பர் 9, 2012

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு
லூக்கா 3:1-6
   திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேய பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு இத்துரேயா, திரக்கோனித்து பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந் தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக் கைப் பெற்றார். "பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திரு முழுக்குப் பெறுங்கள்'' என்று யோர்தான் ஆற்றை அடுத் துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றி வந்தார்.
    இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்கு கிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மை யாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல் லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவ ரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வருகைக்காக திருமுழுக்கு யோவான் மக்களைத் தயார் செய்வதைக் காண்கிறோம். ஆண்டவரின் முன்னோடியாக வந்த யோவான், தனது இறைவாக்கினருக்குரிய பணியை சிறப்பாக செய்கிறார். கடவுளின் பாதையைச் செம்மை யாக்குமாறு வந்த அவர், மக்கள் அனைவரும் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துமாறு அழைப்பு விடுக்கிறார். ஆண்டவரை வரவேற்க மக்களின் உள்ளத் தூய்மை மிகவும் தேவை என்பதை யோவான் வலியுறுத்துகிறார். ஆண்டவரின் வருகைக்காக பள்ளத்தாக்குகள் நிரப்பப்படவும், மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படவும் வேண்டும். இவ்வாறு கோண லானவற்றை நேராக்கவும், கரடுமுரடானவற்றை சமமாக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்கு தடையாக இருக்கும் பாவங்களை விட்டு நாம் மனம்மாறும் பொழுது, ஆண்டவரின் மீட்பை விரைவில் காண முடியும்.