Friday, April 26, 2013

ஏப்ரல் 28, 2013

பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு
யோவான் 13:31-35

   யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி பெற் றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்க ளுக்கு கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தி யது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத் துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலி ருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் சீடர்கள் அனைவருக்கும் அன்பு கட்டளையைக் கொடுக்கிறார். பகைமைக்கு பதிலாக, வெறுப்புக்கு மாறாக, 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளை நமக்கு வழங்கப்படுகிறது. நல்ல ஆயராம் இயேசு நம்மை அன்பு செய்தது போன்று, தாராளமாய், பொறுமையாய், கனிவாய், உண்மையாய், உயிரை கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு நம் மீது கொண்ட அன்பால் தந்தையாம் கடவுளை மாட்சிபடுத்தியது போன்று, நமது அன்பு வாழ்வால் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை நிரூபிக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு வின் குரலுக்கு செவிகொடுத்து, இறையன்பிலும் பிரரன்பிலும் நாம் வளர வேண்டும். கிறிஸ் துவின் அன்பை நமது வாழ்வில் பிரதிபலிக்கும் உண்மையான சீடர்களாய் வாழும்போது, நாமும் கடவுளை மாட்சிப்படுத்துபவர்களாய் திகழ முடியும்.

Friday, April 19, 2013

ஏப்ரல் 21, 2013

பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு
யோவான் 10:27-30

   அக்காலத்தில் இயேசு கூறியது: "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரி யும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற் றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தை யின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.''


சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னை ஒரு நல்ல ஆயராக அடையாளப்படுத்துகிறார். நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரையும் கொடுப்பார்; எதிரிகளிடம் இருந்து அவற்றைக் காப்பாற்றுவார். அவர் நலிந்த ஆடுகளை தம் தோளில் சுமந்து செல்வார்; வழி தவறிய வற்றைத் தேடிச் செல்வார். நல்ல ஆயரின் குரலை ஆடுகள் அறிந்து கொள்ளும். ஆயரின் குரலைக் கேட்டு அவரைப் பின்தொடரும். அவர் காட்டும் நீரூற்றுகள் நிறைந்த மேய்ச்சல் நிலத்தில் உண்டு இளைப்பாறும். அவற்றை யாரும் ஆயரிடம் இருந்து பறித்துச் செல்ல முடியாது. கடவுளின் ஆடுகளாகிய நாம் நல்லாயராம் இயேசுவின் குரலுக்கு செவிகொடுத்து, அவரைப் பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவை நாம் பின்தொடரும் போது, அவர் அளிக்கும் நிலைவாழ்வை நிறைவாக பெற்றுக்கொள்ள முடியும்.

Friday, April 12, 2013

ஏப்ரல் 14, 2013

பாஸ்கா காலம் 3-ம் ஞாயிறு
யோவான் 21:1-19

   அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ் வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலே யாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயு வின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், "நான் மீன்பிடிக்கப் போகிறேன்'' என்றார். அவர்கள், "நாங்களும் உம்மோடு வருகிறோம்'' என்று கூறி, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
   ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், "பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இல்லை'' என்றார்கள். அவர், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், "அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்'' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந் திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
   படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், "நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்'' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், "உணவருந்த வாருங்கள்'' என்றார். சீடர்களுள் எவரும், "நீர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறை யாகத் தோன்றினார்.
   அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்'' என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்து கிறாயா?'' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்'' என்றார். மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?'' என்று கேட்டார். 'உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'' என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், "என்னைப் பின்தொடர்'' என்றார்.

சிந்தனை:
   யூதர்களுக்கு அஞ்சி பூட்டிய அறைகளுக்குள் இருந்த திருத்தூதர்கள், உயிர்த்த இயேசு கொடுத்த அனுபவத்தால் வெளியே வந்து மீன்பிடிக்க செல்கிறார்கள். அதாவது, பேதுரு, யோவான், தோமா உள்ளிட்ட சீடர்கள் தங்களது பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு கிறார்கள். ஆனால், சீடர்களின் வேலை இதுவல்ல என்பதை உணர்த்துவதற்காக இயேசு மீண்டும் அவர்களுக்குத் தோன்றுகிறார். "வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்" என்ற இயேசு வின் வார்த்தைகள் மூலம், சீடர்கள் மீண்டும் நற்செய்தி அறிவிப்பு பணிக்கு அழைக்கப்படு வதைக் காண்கிறோம். இந்த அழைப்பின் வழியாக சீடர்கள் அனைவரும் இயேசுவை முழு மையாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள். தாங்கள் கடவுளின் பணிக்காக மீண்டும் அழைக்கப்படுவதையும் உணர்ந்து கொள்கிறார்கள். இயேசுவின் அழைப்பில் சிறப்பாக பேதுரு வுக்கு தலைமைப் பணி வழங்கப்படுகிறது. இயேசுவைப் பின்தொடர்ந்து திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பை பேதுரு பெறுகிறார். திருச்சபையின் வழிகாட்டுதல்படி வாழ்ந்தால், நாமும் இயேசுவைப் பின்தொடர முடியும்.

Friday, April 5, 2013

ஏப்ரல் 7, 2013

பாஸ்கா காலம் 2-ம் ஞாயிறு
யோவான் 20:19-31

   அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர் கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.
   பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.
   வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

சிந்தனை:
   யூதர்களுக்கு அஞ்சி அறைக்குள் அடைபட்டுக் கிடந்த திருத்தூதர்களால் இயேசு உயிர்த் தெழுந்தார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. கலங்கிய உள்ளங்களுக்கு அமைதியை பரிசளிக்கிறார் உயிர்த்த ஆண்டவர். அவர்கள் உறுதியான மனதைப் பெறும்படியாக தூய ஆவியை அளித்ததுடன், பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் அவர்களுக்கு கொடுக்கி றார். ஆனால், பயந்து நடுங்கிய சீடர்களுள் ஒருவராக தோமா இருக்கவில்லை. அவர் துணி வுடன் வெளியே சென்று வருகிறார். மற்ற சீடர்களின் அறிவிப்பு மூலம், தான் ஆண்டவரை காணும் வாய்ப்பை இழந்துவிட்டதை தோமா உணர்கிறார். உயிர்த்த இயேசுவை உண்மை யான அன்புடன் தேடுகிறார். அவரது தேடலுக்கு ஆண்டவர் பதிலளித்தார். தோமாவின் வழி யாக, கிறிஸ்துவின் சீடர்கள் அனைவருடைய சந்தேகமும் நீங்குகிறது. உயிர்த்த ஆண்டவ ரில் நம்பிக்கை கொண்டவர்களாய், தோமாவைப் போன்று சான்று பகரும்போது நாமும் பலருடைய மனமாற்றத்திற்கு உதவ முடியும்.