Friday, August 3, 2012

ஆகஸ்ட் 5, 2012

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு
யோவான் 6:24-35
   அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியா வில் இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் படகு களில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்ற னர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்ட தால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தை யாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்'' என்றார். அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்'' என்றார்.
   அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! 'அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!'' என்றனர். இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது'' என்றார். அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்'' என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என் னிடம் நம்பிக்கை கொண்டிருப்ப வருக்கு என்றுமே தாகம் இராது'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தானே வாழ்வு தரும் உணவு என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். அப்பங்களை வயிறார அவர்கள், "மோசே வானிலிருந்து மன்னாவைப் பொழியச் செய்து அற்புதம் செய்தாரே, நீர் என்ன அரும் செயல் செய்யப்போகிறீர்?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். உணவுக்காக ஏங்கிய அவர்களுக்கு இயேசு தானே வானிலிருந்து இரங்கி வந்த உயிருள்ள உணவு என்று தெளிவுபடுத்துகிறார். நற்கருணை வழியாக தன் னையே உணவாக அளிக்கும் இயேசுவில் நம்பிக்கை வைக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் நன்மைத்தனத்தில் முழுமையாக நம்பிக்கை கொள்ளும்போது, நாம் நிலை வாழ்வுக்கு உரியவர்களாக மாற்றம் பெற முடியும்.