Friday, January 25, 2013

ஜனவரி 27, 2013

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு
லூக்கா 1:1-4,4:14-21
   மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறை வேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழு தப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத் தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
   அலகையினால் சோதிக்கப்பட்ட பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்க ளுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமை யாகப் பேசினர். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயா வின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ''ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட் டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ''நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார்.

சிந்தனை:
   லூக்கா நற்செய்தியில் காணப்படும் ஆண்டவர் இயேசுவின் முதல் தொழுகைக்கூட போதனையை இன்று கேட்கிறோம். இந்த போதனைக்கு முன்பும் இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய் கலிலேயாவின் தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். இந்த போதனைப் பணியின் வழியாக, எசாயாவின் இறைவாக்கு இயேசுவின் வாழ்வில் நிறை வேறியதை நாம் காண்கிறோம். பாவத்தின் பிடியில் சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிக்க வும், கடவுளைப் பற்றிய தெளிவான பார்வையை நமக்கு அளிக்கவும் இயேசு வந்தார். ஆன்ம நிலையில் ஏழைகளாக இருப்பவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படவும், ஆண்டவரின் அருள் அனைவருக்கும் வழங்கப்படவும் இறைமகன் மனிதரானார். நாம் அனைவரும் இயேசுவை உற்று நோக்க அழைக்கப்படுகிறோம். மறைநூல் இறைவாக்குகள் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறியதை நாம் உணர்ந்துகொள்ளும் பொழுது, உலக வரலாற்றில் ஆண்டவரின் மீட்புச் செயல்பாட்டை நாம் புரிந்துகொள்ள முடியும்.

Friday, January 18, 2013

ஜனவரி 20, 2013

பொதுக்காலம் 2-ம் ஞாயிறு
யோவான் 2:1-12
   கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது'' என்றார். இயேசு அவரி டம், "அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார்.
   இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார். யூதரின் தூய் மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், "இத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
   பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப் பிட்டு, "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?'' என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
   இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், இறைமகன் இயேசு பொது வாழ்வில் செய்த முதல் அரும் அடையாளத்தைக் காண்கிறோம். இயேசு, தனது தாயுடனும் சீடர்களுடனும் ஒரு திருமண விருந்துக்கு செல்கிறார். அங்கே விருந்துக்கு மிகத் தேவையானதும், குடும்பத்தின் மதிப்பை பறைசாற்றுவதுமான திராட்சை இரசம் தீர்ந்துவிடுகிறது. அநேகமாக இந்த செய்தி, மண மகனின் தாய் மூலமாக அன்னை மரியாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர் தன் மகனில் முழுமையான நம்பிக்கை கொண்டவராக, அற்புதம் நிகழ்த்துவதற்கான கோரிக் கையை முன்வைக்கிறார். அதற்கான நேரம் வரவில்லை என்று கூறி இயேசு தட்டிக்கழிக்க நினைத்தா லும், மரியா தனது நம்பிக்கையில் முன்னோக்கிச் சென்று "அவர் உங்களுக்குச் சொல்வ தெல்லாம் செய்யுங்கள்" என்று பணியாளரிடம் அறிவுறுத்துகிறார். அன்னை மரியாவின் நம்பிக்கையாலும் பரிந்துரையாலும் அங்கு முதல் அரும் அடையாளம் நிகழ்கிறது. நாமும் ஆண்டவரில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய், நமது வேண்டுதல்களை அவரிடம் சமர்ப் பிக்கும் பொழுது புதுமைகளைக் காண முடியும்.

Friday, January 11, 2013

ஜனவரி 13, 2013

ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா
லூக்கா 3:15-16,21-22
   அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக் குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமை மிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப் பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்" என்றார்.
   மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசு வும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த போது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி, யோவானிடம் இயேசு திருமுழுக்கு பெற்ற நிகழ்வை நமக்கு எடுத் துரைக்கிறது. மெசியாவின் வருகைக்காக காத்திருந்த இஸ்ரயேல் மக்களை, ஆண்டவரின் வருகைக்காக தயார் செய்யும் பணியை யோவான் செய்வதை இங்கு காண்கிறோம். தன்னை விடப் பெரியவரான இறைமகனின் வருகைக்காக, மக்களின் மனங்களை யோவான் தூய் மைப்படுத்துகிறார். யோவானின் கையால் திருமுழுக்கு பெறுமாறு இறைமகன் இயேசு யோர்தானுக்கு வருகிறார். இயேசுவின் இறையரசு பணியின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில், அவர் மீது தூய ஆவி இறங்கி வருகிறார்; தந்தையாம் இறைவனும் இயேசுவுக்கு சான்று பகர்கிறார். நீராலும் தூய ஆவியாலும் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும், இயேசுவைப் போன்று இறைத்தந்தையின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். திருமுழுக்கின் வழியாக திருச்சபையின் உறுப்பினர்களாக மாறியுள்ள நாம், இயேசுவின் சாட்சிகளாக வாழும்போது, இந்த உலகத்தின் தீய நாட்டங்களை வெற்றிகொள்ள முடியும்.

Friday, January 4, 2013

ஜனவரி 6, 2013

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
மத்தேயு 2:1-12
   ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகே மில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக் கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்'' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழு வதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களை யும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ர யேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்'' என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், "நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்'' என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
   அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட் டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், குழந்தை இயேசுவை வணங்கச் சென்ற ஞானிகளைப் பற்றிக் காண்கிறோம். மனித உடலெடுத்த இறையரசரை ஆராதிக்க, இந்த ஞானிகள் விண்மீனைப் பின்தொடர்ந்து நீண்ட பயணம் மேற்கொண்டார்கள். மனுவுருவான இறைமகனை அரச மாளிகையில் சென்று தேடியபோது, அவர்களால் அவரை கண்டுகொள்ள முடியவில்லை. அங்கே அனைத்துலக அரசரைக் கொல்லத் துடித்த நயவஞ்சக நரியான எரோதுதான் இருந் தான். ஆனால் மனிதகுல மீட்பர் பிறந்த இடத்தை அறிந்துகொள்ள ஞானிகளுக்கு அங்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மறைநூல் இறைவாக்கு வழியாக அவர்கள் ஆண்டவரின் பிறப்பிடத்தை அறிந்து கொண்டார்கள். விண்மீனின் வழிகாட்டுதலில் அந்த இடத்தை அடைந்து, உலக மீட் பரை நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். நாமும் இந்த ஞானி களைப் போன்று ஆன்மீகப் பயணத்தில் முன்னேறும் பொழுது, ஆண்டவரை முகமுகமாய் தரிசித்து வணங்கும் பேறுபெற்றவர்களாக மாற முடியும்.

Tuesday, January 1, 2013

ஜனவரி 1, 2013

புனித கன்னி மரியா இறைவனின் தாய் பெருவிழா

லூக்கா 2:16-21
   அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தி யிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தை யைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித் தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப் படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்ட வாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
   குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே வானதூதர் சொல் லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.