Friday, August 24, 2012

ஆகஸ்ட் 26, 2012

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு
யோவான் 6:60-69
   அக்காலத்தில் இயேசு சொல்வதைக் கேட்டு அவருடைய சீடர் பலர், "இதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்; இப் பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?'' என்று பேசிக் கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப் பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிட மகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவி யைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை'' என்றார். நம்பாதோர் யார் யார் என்பதும், தம்மைக் காட்டிக் கொடுக்க இருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. மேலும் அவர், "இதன் காரணமாகத் தான் 'என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது' என்று உங்களுக் குக் கூறினேன்'' என்றார்.
   அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவ ரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய்விட நினைக்கி றீர்களா?'' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவு ளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அதை நம்புகிறோம்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள், அதில் உள்ள உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியாததால் அவரிடம் இருந்து விலகிச் சென்றதை காண் கிறோம். வார்த்தையான இறைவனின் வார்த்தைகள் யூத மக்களுக்கு கசப்பாக தெரிகின்றன. இயேசுவின் வார்த்தைகளில் இருந்த ஆன்மீக ஆழத்தைக் காணும் மனநிலை அவர்களிடம் இல்லை. கடவுளின் மறைபொருள் நமக்கு புரியாததாக இருந்தாலும், அதன் உண்மை கசப் பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். ஏனெனில் ஆண்டவ ரின் வார்த்தைகள் வாழ்வு தருபவையாக உள்ளன. பேதுருவைப் போல ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும் மனநிலையைப் பெற்றுக்கொள்ளும்போது நாம் உண்மை வாழ்வைக் கண் டடைய முடியும்.

Friday, August 17, 2012

ஆகஸ்ட் 19, 2012

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு
யோவான் 6:51-58
   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என் றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கி றேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்றார். "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
   இயேசு அவர்களிடம் கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத் திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் உலகு வாழ்வதற்காக இயேசு தனது சதையை உணவாகக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதை புரிந்துகொள்ள முடியாத மக்கள் தங்களிடையே வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார்கள். நற்கருணையில் இயேசு முழுமையாக பிரசன்னமாகியிருப் பதை உணராத மக்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இயேசு வின் வாக்குறுதிகள் உண்மையானவை. அவர் கோதுமை அப்பம் மற்றும் திராட்சை இரசத் தின் வடிவில் தனது சதையையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகவும் பானமாகவும் தந்தி ருக்கிறார். இயேசுவின் சதையை உண்டு, இரத்தத்தைக் குடிப்பவரே அவரோடு இணைந்திருப் பர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய இயேசுவில் முழுமை யாக நம்பிக்கை கொண்டு வாழும் போது, அவர் வழியாக நாம் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Friday, August 10, 2012

ஆகஸ்ட் 12, 2012

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு
யோவான் 6:41-51
   அக்காலத்தில் "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவ ருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். "இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தை யும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படிச் சொல்லலாம்?" என்று பேசிக் கொண்டார்கள்.
   இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: "உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னி டம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய் யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற் காகவே கொடுக்கிறேன்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னை விண்ணகத்தில் இருந்து வந்தவர் என்று கூறியதால், யூதர்கள் முணுமுணுப்பதைக் காண்கிறோம். இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் கள் தயங்குகிறார்கள். இயேசுவை ஒரு சாதாரண மனிதரராகவே பார்த்து பழகியவர்களுக்கு, அவரை விண்ணில் இருந்து வந்தவராக, அதாவது இறைமகனாக ஏற்றுக்கொள்ள மனம் இல்லை. நம்மோடு இருக்கிற இவர் நம்மைவிட உயர்ந்தவராக இருக்க முடியாது என்று அவர்கள் நினைக்கின்றனர். இயேசுவோ தன்னில் நம்பிக்கை கொள்வோருக்கு நிலை வாழ்வை வாக்களிக்கிறார். விண்ணகத்தில் இருந்து வந்த இயேசுவே நிலைவாழ்வு தரும் உணவு என்பதை முழுமையாக நம்ப நாம் அழைக்கப்படுகிறோம். நற்கருணையில் இயேசு வின் சதையை உண்ணும் பேறுபெற்ற நாம், அவரில் நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் போது நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Friday, August 3, 2012

ஆகஸ்ட் 5, 2012

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு
யோவான் 6:24-35
   அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியா வில் இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் படகு களில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்ற னர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்ட தால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தை யாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்'' என்றார். அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்'' என்றார்.
   அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! 'அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!'' என்றனர். இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது'' என்றார். அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்'' என்று கேட்டுக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என் னிடம் நம்பிக்கை கொண்டிருப்ப வருக்கு என்றுமே தாகம் இராது'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தானே வாழ்வு தரும் உணவு என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். அப்பங்களை வயிறார அவர்கள், "மோசே வானிலிருந்து மன்னாவைப் பொழியச் செய்து அற்புதம் செய்தாரே, நீர் என்ன அரும் செயல் செய்யப்போகிறீர்?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். உணவுக்காக ஏங்கிய அவர்களுக்கு இயேசு தானே வானிலிருந்து இரங்கி வந்த உயிருள்ள உணவு என்று தெளிவுபடுத்துகிறார். நற்கருணை வழியாக தன் னையே உணவாக அளிக்கும் இயேசுவில் நம்பிக்கை வைக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் நன்மைத்தனத்தில் முழுமையாக நம்பிக்கை கொள்ளும்போது, நாம் நிலை வாழ்வுக்கு உரியவர்களாக மாற்றம் பெற முடியும்.