Friday, June 8, 2012

ஜூன் 10, 2012

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா
மாற்கு 14:12-16,22-26

   புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள். அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இரு வரை அனுப்பினார்: "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல் லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்கு செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமை யாளரிடம், "'நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய் யுங்கள்.'' சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத் தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
   அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்'' என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறை யாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒரு போதும் குடிக்கமாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

சிந்தனை:
   கோதுமை அப்பத்திலும், திராட்சைப்பழ இரசத்திலும் நம் ஆண்டவரின் திருஉடலும், திரு இரத்தமும் அவரது இறைப்பிரசன்னமும் அடங்கியுள்ள ஒப்பற்ற மறையுண்மையை இன்று நாம் கொண்டாடுகிறோம். உலகமே கொள்ள முடியாத இறைவன், தன்னை உணவின் வடி விலே தந்திருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். நம் கண்ணுக்கு புலப்படாததாக இந்த நற் கருணை மறைபொருள் இருந்தாலும், இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் வகை யில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உண்மை. நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழும்போது, நற்கருணை நாதருக்கு நாம் உண்மையாக சான்றுபகர முடியும்.