Friday, September 28, 2012

செப்டம்பர் 30, 2012

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு
மாற்கு 9:38-48
   அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒரு வர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார். அதற்கு இயேசு கூறியது: "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிப வர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்ப தால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்க ளுக்குச் சொல்கிறேன். என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோ ருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நர கத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறை யாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, ஆண்டவரின் பெயரால் செயல்படுபவர்களைப் பற்றி பேசுகிறார். கிறிஸ்துவுக்காக பணி செய்பவர்கள் தூய உள்ளம் கொண்டவர்களாய், குழந்தை களைப் போன்று இருக்க அழைக்கப்படுவதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் சீடர்கள் என்ப தற்காக, அவர்களுக்கு உதவி செய்பவர்கள் கைம்மாறு பெறாமல் போகார் என்று இயேசு கூறுகிறார். அதே வேளையில், கிறிஸ்துவின் சீடர்களை பாவம் செய்யத் தூண்டுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். மேலும் தனது சீடர்கள் அனைவரும் தூய வாழ்வு வாழ வேண்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். பாவம் செய்யும் உடல் உறுப்புகளோடு நரகத்துக்கு செல்வதைவிட, உடல் ஊனமுற்றவராய் இறையாட்சி யில் நுழைய அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் அழைப்புக்கு உகந்த வகையில் குழந்தை களைப் போன்று மாறும்போது, நாம் இறைத்தந்தைக்கு ஏற்ற  தூய வாழ்வு வாழ முடியும்.