Friday, March 23, 2012

மார்ச் 25, 2012

தவக்காலம் 5-ம் ஞாயிறு
யோவான் 12:20-33
   அக்காலத்தில் வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோ ருள் கிரேக்கர் சிலரும் இருந் தனர். இவர்கள் கலிலேயா விலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, "ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்று கேட்டுக் கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயா விடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.
   இயேசு அவர்களைப் பார்த்து, "மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண் ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்'' என்றார். மேலும் இயேசு, "இப்போது என் உள்ளம் கலக்க முற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? 'தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்' என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக் கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்'' என்றார்.
   அப்போது வானிலிருந்து ஒரு குரல், "மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்'' என்று ஒலித்தது. அங்கு கூட்டமாய் நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, "அது இடிமுழக்கம்'' என்றனர். வேறு சிலர், "அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு'' என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, "இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்'' என்றார். தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

சிந்தனை:
   சத்தான மண்ணில் விதை மடியும்போது, புதிய பயிர் தோன்றி பல மடங்கு விளைச்சலைத் தருகிறது. அவ்வாறே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் ஒவ்வொருவரும் மடியும்போது, பல மடங்கு பலனளிக்க முடியும். நாம் கடவுளுக்கு உகந்த வகையில் பலன் தரும்போது, நம் ஆண்டவர் இயேசுவின் வழியாக தந்தையாம் இறைவனை மாட்சிப்படுத்துகிறோம். கிறிஸ்து அளிக்கும் மீட்பையும் நாம் உரிமையாக்கிக் கொள்கிறோம்.

Friday, March 16, 2012

மார்ச் 18, 2012

தவக்காலம் 4-ம் ஞாயிறு
யோவான் 3:14-21
   அக்காலத்தில் இயேசு நிக்கதேமுக்கு கூறியது: "பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரி டம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம் பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்."

சிந்தனை:
   பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது இயேசுவின் சிலுவை மரணத்துக்கு முன் அடையாளம். வெண்கலப் பாம்பைக் கண்டோர் இவ்வுலக வாழ்வைப் பெற்றுக் கொண்டது போல, சிலுவையில் உயர்த்தப்பட்ட இறைமகனைக் கண்டுணர்வோர் மறுவுலக வாழ்வைப் பெற்றுக்கொள்வர். கடவுளின் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும்போது, நாம் ஒளிமயமான நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.

Friday, March 9, 2012

மார்ச் 11, 2012

தவக்காலம் 3-ம் ஞாயிறு
மாற்கு 9:2-10
   அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவி லில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந் திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டி னார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார்.
   அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்து செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், 'உம் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, "இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், "இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். அப்போது யூதர்கள், "இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
   பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச்சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

சிந்தனை:
   இயேசு எருசலேம் கோவிலில் இருந்து வியாபாரிகளை விரட்டுகிறார். தவறான செயல் களை அழித்தொழிக்கும் வகையில் சாட்டையை கையில் எடுக்கிறார். அதே வேளையில், தனது இறப்பையும் உயிர்ப்பையும் முன்னறிவிக்கிறார். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வேளையில்தான் நாம் கிறிஸ்துவின் பணியிலும், அவரது உயிர்ப்பிலும் பங்குபெற முடியும்.

Friday, March 2, 2012

மார்ச் 4, 2012

தவக்காலம் 2-ம் ஞாயிறு
மாற்கு 9:2-10
   அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர் களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரு டைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளி வீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண் டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெ னில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். 
   அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், 'மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத் துரைக்கக் கூடாது' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

சிந்தனை:
   இயேசு கிறிஸ்து தனது சாவை முதல் முறை முன்னறிவித்தப் பின் உருமாற்றம் அடைகிறார். சீடர்கள் முன்பாக அவர் தனது இறை மாட்சியை வெளிப்படுத்துகிறார். திருச் சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறுவதை இக்காட்சி நமக்கு உணர்த்து கிறது. இறைத்தந்தையின் ஒரே மகனுடைய வார்த்தைகளுக்கு செவிசாய்த்தால் நாமும் இத்தகைய  இறை மாட்சியில் பங்குபெற முடியும்.