லூக்கா 3:10-18
அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதி யடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோது மையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
சிந்தனை:
இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், இயேசுவின் வருகையை முன்னறிவிப் பதைக் காண்கிறோம். மனிதராக பிறந்தவர்கள் அனைவரிலும் பெரியவர் என்று நற்செய்தி போற்றும் திருமுழுக்கு யோவான், தன்னைவிட பெரியவரான இயேசுவைப் பற்றி மக்களுக்கு போதிக்கிறார். நல்லோரையும் தீயோரையும் பிரித்து தீர்ப்பிட வல்லவரான ஆண்டவரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்கிறார். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாத வரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்று கூறி, பகிர்தலின் மகிழ்ச்சியை அனுபவிக்க அனைவருக்கும் கற்றுத் தருகிறார். அநீதியான செயல் களைப் புறக்கணித்து, அன்பு மற்றும் நீதியின் அடிப்படையிலான நற்செயல்களை செய்ய நாம்
அழைக்கப்படுகிறோம். மீட்பராம் கிறிஸ்துவின் வருகைக்கு மனதார நம்மை தயாரிக் கும் பொழுது, மகிழ்ச்சி அளிக்கும் அவரது வருகையை நாம் விரைவாக்க முடியும்.