Friday, August 17, 2012

ஆகஸ்ட் 19, 2012

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு
யோவான் 6:51-58
   அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என் றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கி றேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்றார். "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?'' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
   இயேசு அவர்களிடம் கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத் திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் உலகு வாழ்வதற்காக இயேசு தனது சதையை உணவாகக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதை புரிந்துகொள்ள முடியாத மக்கள் தங்களிடையே வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார்கள். நற்கருணையில் இயேசு முழுமையாக பிரசன்னமாகியிருப் பதை உணராத மக்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இயேசு வின் வாக்குறுதிகள் உண்மையானவை. அவர் கோதுமை அப்பம் மற்றும் திராட்சை இரசத் தின் வடிவில் தனது சதையையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகவும் பானமாகவும் தந்தி ருக்கிறார். இயேசுவின் சதையை உண்டு, இரத்தத்தைக் குடிப்பவரே அவரோடு இணைந்திருப் பர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய இயேசுவில் முழுமை யாக நம்பிக்கை கொண்டு வாழும் போது, அவர் வழியாக நாம் நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.