Friday, September 28, 2012

செப்டம்பர் 30, 2012

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு
மாற்கு 9:38-48
   அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒரு வர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார். அதற்கு இயேசு கூறியது: "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிப வர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்ப தால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்க ளுக்குச் சொல்கிறேன். என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோ ருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நர கத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறை யாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, ஆண்டவரின் பெயரால் செயல்படுபவர்களைப் பற்றி பேசுகிறார். கிறிஸ்துவுக்காக பணி செய்பவர்கள் தூய உள்ளம் கொண்டவர்களாய், குழந்தை களைப் போன்று இருக்க அழைக்கப்படுவதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் சீடர்கள் என்ப தற்காக, அவர்களுக்கு உதவி செய்பவர்கள் கைம்மாறு பெறாமல் போகார் என்று இயேசு கூறுகிறார். அதே வேளையில், கிறிஸ்துவின் சீடர்களை பாவம் செய்யத் தூண்டுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். மேலும் தனது சீடர்கள் அனைவரும் தூய வாழ்வு வாழ வேண்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். பாவம் செய்யும் உடல் உறுப்புகளோடு நரகத்துக்கு செல்வதைவிட, உடல் ஊனமுற்றவராய் இறையாட்சி யில் நுழைய அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் அழைப்புக்கு உகந்த வகையில் குழந்தை களைப் போன்று மாறும்போது, நாம் இறைத்தந்தைக்கு ஏற்ற  தூய வாழ்வு வாழ முடியும்.

Friday, September 21, 2012

செப்டம்பர் 23, 2012

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு
மாற்கு 9:30-37
   அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப் பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், "மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கி றார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப் பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.
   அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, "வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று அவர்களிடம் கேட் டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட் டும்'' என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது எப்படி என்பதைப் பற்றி சீடர்களுக்கு கற்பிக்கிறதைக் காண்கிறோம். இயேசு தனது பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றைப் பற்றி சீடர்களுக்கு முன்னறிவிக்கிறார். ஆனால் அவரது வார்த் தைகளைப் புரிந்துகொள்ள சீடர்கள் தயாராக இல்லை. ஏனெனில், இயேசு அரசரானால் யார் என்ன பதவிக்கு வர முடியும் என்பதைப் பற்றிய சிந்தனையில் அவர்கள் இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக கப்பர்நாகுமுக்கு செல்லும் வழியில் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் நடக்கிறது. இதனை அறிந்த இயேசு, பெரியவராக அதிகாரத்தில் இருக்க விரும்பு கிறவர் முதலில் பணிவிடை செய்ய தயாராக இருக்க வீண்டும் என்று அறிவுறுத்துகிறார். கிறிஸ்துவின் பெயரால் நாம் பிறரை ஏற்றுக்கொள்ளும்போது, நாம் விண்ணக தந்தைக்கு உகந்தவர்களாக மாற முடியும்.

Friday, September 14, 2012

செப்டம்பர் 16, 2012

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு
மாற்கு 8:27-35
   அக்காலத்தில் இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியா வைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, "நான் யார் என மக்கள் சொல் கிறார்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். 'மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர் கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டு கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்' என்று இயேசு அவர்க ளுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவு ளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.
   பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின் பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடு வார்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்" என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னைப் பற்றி பிறர் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை சீடர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதைக் காண்கிறோம். மக்களின் உள்ளத்தையும், எண்ணங்களையும் அறிந்திருந்த இயேசு அவற்றை சீடர்களின் வாய்மொழி யாக கேட்டறிந்ததில் ஒரு நோக்கம் இருக்கிறது. தான் உலகிற்கு வந்ததன் நோக்கத்தை சீடர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றே இயேசு சீடர்களிடம் கேள்வி எழுப்புகிறார். பேதுரு இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்டாலும், அவரை இவ்வுலக அரசுக்குரியவ ராகவே பார்க்கிறார். ஆனால் இறையாட்சியை உலகில் நிறுவ வந்த இயேசு துன்பங்களை ஏற்பதன் அவசியத்தை சீடர்களுக்கு உணர்த்துகிறார். நம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடரும்போது, நாம் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

Friday, September 7, 2012

செப்டம்பர் 9, 2012

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு
மாற்கு 7:31-37
   அக்காலத்தில் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழி யாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலே யக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுப வருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்து குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்து சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி 'எப்பத்தா' அதாவது 'திறக்கப்படு' என்றார். உடனே அவரு டைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
   இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவ ரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "இவர் எத்துணை நன்றாக யாவற் றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!'' என்று பேசிக்கொண்டார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒரு வரை குணப்படுத்துகிறார். இயேசுவின் சொல்லிலும் செயலிலும் வல்லமை வெளிப்பட்டு ஓர் அற்புதம் நிகழ்வதைக் காண்கிறோம். அந்த காத்து கேளாதவரைக் கூட்டிச் சென்றவர்கள், மற்றவர்களின் பேச்சைக் கேட்டு இயேசுவிடம் சென்றிருக்க வேண்டும். எனவேதான், இயேசு வின் புதுமையைக் கண்டு வியப்படைகிறார்கள். அதன் தாக்கம் அவர்களது செயலில் வெளிப்படுகிறது. இயேசுவின் கட்டளையையும் மீறி அவர்கள் ஊரெங்கும் சென்று பரவும் வகையில் அதை அறிவித்தார்கள் என்று காண்கிறோம். நாமும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கும்போது, அவரது மாட்சியை இந்த உலகம் உணரச் செய்ய முடியும்.

Saturday, September 1, 2012

செப்டம்பர் 2, 2012

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு
மாற்கு 7:1-8,14-15,21-23
   ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற் றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன. ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத் திருக்கிறார். "இம்மக்கள் உதட்டினால் என் னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக் கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்' என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.
   இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, "நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக் குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயி ருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத் திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காம வெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் கட்டளைகளை எந்த விதத்தில் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்குகிறார். மனிதரின் தேவைக்கு ஏற்ப அவற்றைத் திரித்துக் கூறுவது தவறு என்று அவர் எடுத்துரைக்கிறார். கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ் வதை விட உலகம் சார்ந்த மரபுகளைப் பின்பற்றுவது முக்கியமானது அல்ல என்று கூறும் இயேசு, மரபுகளை உயர்த்திப் பிடிப்போரைக் கடுமையாக சாடுகிறார். நமது உணவுகள் அல்ல, நமது சிந்தனைகளே நாம் பாவம் செய்ய காரணமாக அமைகின்றன என்பதை நம் ஆண்டவர் இங்கு தெளிவுபடுத்துவதைக் காண்கிறோம். தீமைகளை விலக்கி, நல்ல உள்ளம் கொண்ட வர்களாய் வாழும்போது நம்மால் கடவுளுக்கு உகந்தவர்களாய் மாற முடியும்.