Friday, December 28, 2012

டிசம்பர் 30, 2012

திருக்குடும்பம் விழா

லூக்கா 2:41-52
   ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்கு போவார்கள்; இயேசுவுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்த பின்பு உறவினரி டையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்கு திரும்பிச் சென்றார்கள்.
   மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே'' என்றார். அவர் அவர்களிடம், "நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரி யாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
   பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவ ராய் வாழ்ந்து வந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், திருக்குடும்பத்தின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்ச் சியைக் காண்கிறோம். எருசலேம் கோவிலுக்கு சென்று திரும்பிய வேளையில் இறைமகன் இயேசுவை, மரியாவும் யோசேப்பும் இழந்து விடுகிறார்கள். இறைமகனைத் தேடி ஆண்டவ ரின் இல்லத்துக்கு மீண்டும் ஒரு பயணம் இங்கே நிகழ்கிறது. உண்மை இறைவனைப் பற்றிய உண்மைகளை அவர் தேர்ந்தெடுத்த திருச்சபைக்குள் மட்டுமே தேடிக் கண்டடைய முடியும் என்பது இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. மரியாவையும், யோசேப்பையும் போன்று கடவுளை ஆர்வமாய்த் தேடும் உணர்வைப் பெற நாம் அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரை ஏக்கத் தோடு தேடும் மனநிலை நம்மில் உருவாகும் பொழுது, இறைவனின் திருக்குடும்பத்தில் முழுமையாக பங்கேற்கும் வரம் பெற்றவர்களாக நாம் வாழ முடியும்.

Monday, December 24, 2012

டிசம்பர் 25, 2012

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

மத்தேயு 1:18-25
   இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப் பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. மரியா தூய ஆவியால் கருவுற் றிருந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண் டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்கு கனவில் தோன்றி. "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற் றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் மரியா கருவுற்றிருப் பது தூய ஆவி யால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.
   'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம் மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

Friday, December 21, 2012

டிசம்பர் 23, 2012

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு
லூக்கா 1:39-45
   அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றி லிருந்த குழந்தை மகிழ்ச்சி யால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப் போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்ற வர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த் துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், நம்பிக்கையால் இறைமகனைக் கருத்தாங்கிய மரியா எலிச பெத்தை சந்தித்து வாழ்த்திய நிகழ்வைக் காண்கிறோம். இறைவனின் தாயாகும் பேறுபெற்ற நிலையிலும், மரியா எலிசபெத்துக்கு உதவி செய்ய விரைந்து செல்கிறார். இங்கு மரியா வின் தாழ்ச்சியுள்ள குழந்தை உள்ளத்தை நம்மால் காண முடிகிறது. எங்கு குழந்தை உள்ளம் இருக்கிறதோ அங்கே இறைவன் கருவாக உருவெடுப்பார். இறையன்னை மரியாவின் வாழ்த்து, எலிசபெத்தின் வயிற்றில் இருக்கும் யோவானை மகிழ்ச்சியால் துள்ளச் செய்கிறது. இறைமகனின் வருகையை முன்னறிவிக்க வந்தவர், தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவரை அடையாளம் கண்டு கொள்கிறார். நாமும் அன்னை மரியாவைப் போன்று நம்பிக்கை உள்ளவர்களாக இறைமகனை கருத்தாங்கி, யோவானைப் போன்று அவரில் மகிழ்ந்திருந் தால் ஆண்டவரை வரவேற்கும் பேறுபெற்றவர்களாக மாற முடியும்.

Friday, December 14, 2012

டிசம்பர் 16, 2012

திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு
லூக்கா 3:10-18
   அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் போதித்துக் கொண்டிருந்தபோது, "நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லா தவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்றார். வரிதண்டுவோரும் திரு முழுக்குப் பெற வந்து, "போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவரிடம் கேட்டனர். அவர், "உங்களுக் குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண் டாதீர்கள்'' என்றார். படைவீரரும் அவரை நோக்கி, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். அவர், "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என் றிருங்கள்'' என்றார்.
   அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதி யடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோது மையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார். மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், இயேசுவின் வருகையை முன்னறிவிப் பதைக் காண்கிறோம். மனிதராக பிறந்தவர்கள் அனைவரிலும் பெரியவர் என்று நற்செய்தி போற்றும் திருமுழுக்கு யோவான், தன்னைவிட பெரியவரான இயேசுவைப் பற்றி மக்களுக்கு போதிக்கிறார். நல்லோரையும் தீயோரையும் பிரித்து தீர்ப்பிட வல்லவரான ஆண்டவரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்கிறார். "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாத வரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்று கூறி, பகிர்தலின் மகிழ்ச்சியை அனுபவிக்க அனைவருக்கும் கற்றுத் தருகிறார். அநீதியான செயல் களைப் புறக்கணித்து, அன்பு மற்றும் நீதியின் அடிப்படையிலான நற்செயல்களை செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். மீட்பராம் கிறிஸ்துவின் வருகைக்கு மனதார நம்மை தயாரிக் கும் பொழுது, மகிழ்ச்சி அளிக்கும் அவரது வருகையை நாம் விரைவாக்க முடியும்.

Friday, December 7, 2012

டிசம்பர் 9, 2012

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு
லூக்கா 3:1-6
   திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேய பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு இத்துரேயா, திரக்கோனித்து பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந் தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக் கைப் பெற்றார். "பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திரு முழுக்குப் பெறுங்கள்'' என்று யோர்தான் ஆற்றை அடுத் துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றி வந்தார்.
    இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்கு கிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மை யாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல் லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவ ரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வருகைக்காக திருமுழுக்கு யோவான் மக்களைத் தயார் செய்வதைக் காண்கிறோம். ஆண்டவரின் முன்னோடியாக வந்த யோவான், தனது இறைவாக்கினருக்குரிய பணியை சிறப்பாக செய்கிறார். கடவுளின் பாதையைச் செம்மை யாக்குமாறு வந்த அவர், மக்கள் அனைவரும் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துமாறு அழைப்பு விடுக்கிறார். ஆண்டவரை வரவேற்க மக்களின் உள்ளத் தூய்மை மிகவும் தேவை என்பதை யோவான் வலியுறுத்துகிறார். ஆண்டவரின் வருகைக்காக பள்ளத்தாக்குகள் நிரப்பப்படவும், மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படவும் வேண்டும். இவ்வாறு கோண லானவற்றை நேராக்கவும், கரடுமுரடானவற்றை சமமாக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்கு தடையாக இருக்கும் பாவங்களை விட்டு நாம் மனம்மாறும் பொழுது, ஆண்டவரின் மீட்பை விரைவில் காண முடியும்.

Saturday, December 1, 2012

டிசம்பர் 2, 2012

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
லூக்கா 21:25-28,34-36
   அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுல கில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தி னால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான் வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமை யோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வரு வதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும் போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களி யாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்ச ரிக்கையாய் இருங்கள். மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னி லையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தனது இரண்டாம் வருகையின்போது நிகழ இருப்பவை பற்றி எடுத்துரைக்கிறார். அப்போது "மண்ணுலகில் மக்களினங்கள் என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தி னால் மயக்கமுறுவர்" என்று இயேசு எச்சரிக்கை தருகிறார். குடிவெறி, களியாட்டம் போன்ற கேளிக்கைகளில் நம் மனதை செலுத்தாமல், ஆண்டவரின் வருகையை எதிர்பார்த்து எப் பொழுதும் தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம். வானதூதர்கள் புடைசூழ இயேசுவின் வருகை நிகழப்போவது உண்மை. அப்போது நமது செயல்களுக்காக, ஆண்டவர் முன்னிலை யில் நாம் பதிலளிக்க வேண்டும். குழப்பங்களும், கவலைகளும் சூழ்ந்துள்ள இந்த உலகில், விழிப்பாயிருந்து மன்றாடும்போது ஆண்டவரின் மீட்பை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.