Friday, November 16, 2012

நவம்பர் 18, 2012

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு
மாற்கு 13:24-32
   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "அந் நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலி ருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோ டும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார் கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண் ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடி வரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்ட வர்களைக் கூட்டிச் சேர்ப்பார். அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும் வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, உலகின் இறுதி நாள்களைப் பற்றிப் பேசுகிறார். "அந் நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்" என்று, தமது இரண்டாம் வருகைக்கு முன் நிகழப்போகிறவற்றைப் பற்றி இயேசு எடுத்து ரைப்பதைக் காண்கிறோம். ஆண்டவரின் நாளை எதிர்பார்த்து விழிப்பாய் இருப்பதற்காகவே இந்த எச்சரிக்கை நமக்கு தரப்படுகிறது. ஆண்டவர் முன் தூயவர்களாய் நிற்கும் வகையில், நமது வாழ்வை அமைத்துக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரை எதிர்நோக்கிய தாய் நமது வாழ்வை அமைத்துக்கொள்ளும்போது, நாமும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற முடியும்.