Friday, May 3, 2013

மே 5, 2013

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு
யோவான் 14:23-29

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என் மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என் மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பது இல்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னு டையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடை யவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்க ளுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அமை தியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதி யையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 'நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னை விடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழும் முன்பே, சொல்லிவிட்டேன்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் சீடர்களுக்கு அமைதியை அளிக்கிறார். அவர் தரும் அமைதி, உலகம் தரும் அமைதியை விட மிகவும் மேலானது. விண்ணகத் தந்தையிடம் திரும்பிச் செல்லும் முன் இயேசு இந்த அமைதியின் வாக்குறுதியை அளிக்கிறார். துணை யாளராம் தூய ஆவியாரின் வழியாக அமைதி என்னும் கனி நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு கீழ்ப்படிவதன் மூலம் நம் ஆண்டவரின் அன்பு கட்டளை களில் நிலைத்திருந்து, அமைதியின் இனிமையை சுவைக்க நாம் அனைவரும் அழைக்கப் படுகிறோம். ஆண்டவரின் வார்த்தைகளை கடைபிடித்து வாழ்வதன் வழியாக, இறைத்தந்தை யின் மீதான அன்பை வெளிப்படுத்த கிறிஸ்து இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். திருச்சபையின் போதனைகளில் வெளிப்படும் ஆண்டவரின் வார்த்தைகளை, கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் இறைவன் உறையும் ஆலயமாக மாற முடியும்.