Friday, April 26, 2013

ஏப்ரல் 28, 2013

பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு
யோவான் 13:31-35

   யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, "இப்போது மானிடமகன் மாட்சி பெற் றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்க ளுக்கு கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தி யது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத் துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலி ருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் சீடர்கள் அனைவருக்கும் அன்பு கட்டளையைக் கொடுக்கிறார். பகைமைக்கு பதிலாக, வெறுப்புக்கு மாறாக, 'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளை நமக்கு வழங்கப்படுகிறது. நல்ல ஆயராம் இயேசு நம்மை அன்பு செய்தது போன்று, தாராளமாய், பொறுமையாய், கனிவாய், உண்மையாய், உயிரை கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு நம் மீது கொண்ட அன்பால் தந்தையாம் கடவுளை மாட்சிபடுத்தியது போன்று, நமது அன்பு வாழ்வால் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை நிரூபிக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு வின் குரலுக்கு செவிகொடுத்து, இறையன்பிலும் பிரரன்பிலும் நாம் வளர வேண்டும். கிறிஸ் துவின் அன்பை நமது வாழ்வில் பிரதிபலிக்கும் உண்மையான சீடர்களாய் வாழும்போது, நாமும் கடவுளை மாட்சிப்படுத்துபவர்களாய் திகழ முடியும்.