Friday, January 25, 2013

ஜனவரி 27, 2013

பொதுக்காலம் 3-ம் ஞாயிறு
லூக்கா 1:1-4,4:14-21
   மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறை வேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழு தப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத் தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
   அலகையினால் சோதிக்கப்பட்ட பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்க ளுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமை யாகப் பேசினர். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயா வின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ''ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட் டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ''நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார்.

சிந்தனை:
   லூக்கா நற்செய்தியில் காணப்படும் ஆண்டவர் இயேசுவின் முதல் தொழுகைக்கூட போதனையை இன்று கேட்கிறோம். இந்த போதனைக்கு முன்பும் இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய் கலிலேயாவின் தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். இந்த போதனைப் பணியின் வழியாக, எசாயாவின் இறைவாக்கு இயேசுவின் வாழ்வில் நிறை வேறியதை நாம் காண்கிறோம். பாவத்தின் பிடியில் சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிக்க வும், கடவுளைப் பற்றிய தெளிவான பார்வையை நமக்கு அளிக்கவும் இயேசு வந்தார். ஆன்ம நிலையில் ஏழைகளாக இருப்பவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படவும், ஆண்டவரின் அருள் அனைவருக்கும் வழங்கப்படவும் இறைமகன் மனிதரானார். நாம் அனைவரும் இயேசுவை உற்று நோக்க அழைக்கப்படுகிறோம். மறைநூல் இறைவாக்குகள் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறியதை நாம் உணர்ந்துகொள்ளும் பொழுது, உலக வரலாற்றில் ஆண்டவரின் மீட்புச் செயல்பாட்டை நாம் புரிந்துகொள்ள முடியும்.