Friday, March 15, 2013

மார்ச் 17, 2013

தவக்காலம் 5-ம் ஞாயிறு
யோவான் 8:1-11
   அக்காலத்தில் இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவ ரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
   மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, "போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்கு கொடுத்த திருச் சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட் டுக் கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்'' என்று அவர்க ளிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.
   அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர் கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?'' என்று கேட்டார். அவர், "இல்லை, ஐயா'' என்றார். இயேசு அவரிடம், "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவை சோதிக்கும் நோக் குடன், விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து அவரை தண்டிப்பது சரியா, தவறா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். இயேசுவின் பதிலைக் கொண்டு அவருக்கு மக்களிடம் கெட்டப்பெயரை உருவாக்கி விடலாம் என்பது அவர்கள் எண்ணம். இயேசுவோ பிறரிடம் குற்றம் காணும் அவர்களது மனநிலையை போக்க நினைத்தவராய், "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்'' என்று கூறுகிறார். பிறரது குற்றங்களை அலசி ஆராயும் மனநிலையை விடுத்து, நமது பாவங்களை கண் டுணரும் உள்ளத்தைப்பெற அழைக்கப்படுகிறோம். அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டா லும், அந்த பெண்ணோ, தான் தண்டனைக்கு உரியவள் என்ற எண்ணத்துடன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். நமது பாவங்களுக்காக மனம் வருந்த வேண்டுமென்ற அழைப்பு நமக்கு கொடுக்கப்படுகிறது. இயேசு அவரது பாவங்களை மன்னித்து, "இனிப் பாவம் செய்யா தீர்" என்ற அறிவுரையுடன் அவரை அனுப்பி விடுகிறார். நமது குற்றங்களுக்காக தண்டனை வழங்கும் நீதிபதியாக கடவுள் செயல்படுவது இல்லை என்பதை இயேசு உணர்த்துவதைக் காண்கிறோம். நாம் பிறரைத் தீர்ப்பிடாமல் வாழும் பொழுது, கடவுளின் தீர்ப்பில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.