Friday, April 19, 2013

ஏப்ரல் 21, 2013

பாஸ்கா காலம் 4-ம் ஞாயிறு
யோவான் 10:27-30

   அக்காலத்தில் இயேசு கூறியது: "என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரி யும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற் றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தை யின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.''


சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னை ஒரு நல்ல ஆயராக அடையாளப்படுத்துகிறார். நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரையும் கொடுப்பார்; எதிரிகளிடம் இருந்து அவற்றைக் காப்பாற்றுவார். அவர் நலிந்த ஆடுகளை தம் தோளில் சுமந்து செல்வார்; வழி தவறிய வற்றைத் தேடிச் செல்வார். நல்ல ஆயரின் குரலை ஆடுகள் அறிந்து கொள்ளும். ஆயரின் குரலைக் கேட்டு அவரைப் பின்தொடரும். அவர் காட்டும் நீரூற்றுகள் நிறைந்த மேய்ச்சல் நிலத்தில் உண்டு இளைப்பாறும். அவற்றை யாரும் ஆயரிடம் இருந்து பறித்துச் செல்ல முடியாது. கடவுளின் ஆடுகளாகிய நாம் நல்லாயராம் இயேசுவின் குரலுக்கு செவிகொடுத்து, அவரைப் பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவை நாம் பின்தொடரும் போது, அவர் அளிக்கும் நிலைவாழ்வை நிறைவாக பெற்றுக்கொள்ள முடியும்.